1 அன்புள்ள ஸ்வாமி, நீர் நிர்ப்பந்தமாக மரிக்கத் தீர்க்கப்பட்ட தேதுக்காக? நீர் என்ன செய்தீர், தேவரீரின் மீது ஏன் இந்தத் தீது? 2 வாரால் அடிப்பட்டு, எண்ணமற்றீர், குட்டுண்டு முள் முடியும் சூட்டப்பட்டீர்; பிச்சுண்கத் தந்து உம்மைத் தூக்கினார்கள், வதைத்திட்டார்கள். 3 இவ்வாதை யாவும் உமக்கெதினாலே உண்டாயிற்று?ஐயோ, என் பாவத்தாலே; அதும்மை, ஸ்வாமி, இத்தனை அடித்து வதை செய்தது. 4 மா ஆச்சரியம், கர்த்தர் சாக வாரார், நல் மேய்ப்பர் மந்தைக்காக ஜீவன் தாரார், அடியார் தப்பக் குற்றமற்ற மீட்பர் கடனைத் தீர்ப்பர். 5 ஆனாலும் ஒன்று உமக்கேற்றிருக்கும்; நான் உம்மைப்பற்றி, யாவையும் வெறுக்கும் கருத்தாய்ப் பாவ இச்சையை வேர் பேர்க்கும் பண் உமக்கேற்கும். 6 இதற்கும் என் சாமர்த்தியம் போதாது, பழைய துர்க்குணம் என்னால் நீங்காது; நீர் உமதாவியை அளித்துவாரும் பலத்தைத் தாரும். 7 அப்போ நான் உமதன் நிறைந்து, பூலோகக் குப்பைமேல் வெறுப்படைந்து, என் நெஞ்சை உமக்குண்மையாய்க் கொடுக்கும் பலம் இருக்கும். 8 பரகதியிலே நான் வைக்கப்பட்டு கெலிக்கும்போதெல்லாக் குறைவுமற்று எப்போதும் உம்மை, இயேசுவே, துதிப்பேன், இஸ்தோத்திரிப்பேன்.